நெஸ்லே (Nestle) நிறுவனம் மீது சுவிஸ் Public Eye அமைப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. “நெஸ்லேயின் இந் நடவடிக்கையானது நீண்ட வரலாறு கொண்ட காலனியம், சுரண்டல் மற்றும் நிறவாதத்தை வெளிப்படுத்துகிறது. நெஸ்லே வேண்டுமென்றே ஆபிரிக்காவில் உடற் பருமனையும், மிகை-இனிப்பு சம்பந்தப்பட்ட வியாதிகளையும் சீனியூற்றி வளர்க்கிறது” என தென் ஆபிரிக்கCape Town பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லோறி லேக் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
Continue reading “‘வெள்ளை’ நெஸ்லே”வரைபடங்களும் மனிதர்களும் !
உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல்
மூன்று வருடங்களும் எட்டு மாதங்களுமாகிவிட்டதாக சுட்டப்படும் உக்ரைன்-ரசிய போரினை முடிவுக்குக் கொண்டுவர, 28 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் ட்றம்ப் குழாமினால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழாமில் அரச செயலாளர் மார்க்கோ றூபியோ, விசேடதூதுவர் ஸ் ரீவ் விற்கோவ் இருவரும் முக்கியமானவர்கள். இந்த ஒப்பந்தம் ரசியாவுக்கு சார்பானதாக இருப்பதாகவும், உக்ரைனின் இறைமையைப் பாதிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் விமர்சித்து, இந்த ஒப்பந்தத்தை 19 அம்சங்கள் கொண்டதாக மறுவரைவு செய்து ட்றம் இடம் முன்வைத்திருக்கின்றன. இக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த 19 குறித்து விபரமாக எதுவும் தெரியவில்லை.
Continue reading “வரைபடங்களும் மனிதர்களும் !”அரசும் அரசாங்கமும்
அரசாங்கம் (government), என்பதும் அரசு (state) என்பதும் ஒன்றல்ல. தமிழ் ஊடகங்கள் அதை மாத்தி மாத்திப் பாவிப்பதால் பலரும் குழப்பமடைகிறார்கள். அரசின் நிகழ்ச்சி நிரலை மக்களிடம் கொண்டுசென்று செயற்படுத்தும் முக்கியமான நிர்வாக அலகுதான் அரசாங்கம். அரசாங்கத்துக்கும் அதன் தலைவர் அல்லது ஜனாதிபதிக்கும் அதிகாரங்கள் இருக்கிறதுதான். அவர்களுக்கான பலமாக அரசியல் யாப்பும் இருக்கிறது. அதன் எல்லைக்குள் அவர்கள் செயற்படுகிறபோது எந்தச் சிக்கலும் அரசு(state) க்கு இருப்பதில்லை. மக்கள் எழுச்சியும்கூட அப்படித்தான் கையாளப்படுகிறது.
Continue reading “அரசும் அரசாங்கமும்”போர்நிறுத்த ஒப்பந்தம் 2025
காஸாவில் எஞ்சியிருந்த 48 பணயக் கைதிகளில் 20 பேரை கமாஸ் விடுவித்துவிட்டது. மிகுதி 28 பேரும் இஸ்ரேலிய குண்டுவீச்சின் போது இறந்துவிட்டார்கள் என கமாஸ் உறுதிப்படுத்திவிட்டது. அவர்கள் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்களோடு இறந்த உடலங்களாக இடிபாடுகளின் கீழ் சிதைந்துபோயிருப்பார்கள். 24 பணயக் கைதிகளின் உடலங்களும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நான்கு உடலங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு இஸ்ரேலிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் எல்லோருமே உண்மையில் இறந்துவிட்டார்களா அல்லது கொஞ்சப் பேரை கமாஸ் வைத்திருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய எந்த ஆதாரமுமில்லை. அவர்கள் இறந்துவிட்டதாகவே எதிரிகளும் நம்புகிறார்கள். காஸாவே இடிபாடாகக் கிடக்கும்போது தேடுதல் என்பதற்கு ஏதும் அர்த்தம் இருக்குமா என்ன.
அதேபோல் இஸ்ரேலிய சிறையில் கொல்லப்பட்ட பலஸ்தீன கைதிகளின் உடலங்களும் வந்திருக்கின்றன. அவர்கள் மோசமான சித்திரவதைக்கு உட்பட்ட தடயங்கள் உடலில் இருப்பதாக ஐநா செயலாளர் நாயகம் அறிவித்திருக்கிறார். இஸ்ரேலிய சிறையிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தாம் பறிகொடுத்த காலங்களின் மீதேறி மீண்டிருக்கிறார்கள். இறந்துவிட்டார்கள் என நம்பி இருந்த சில குடும்பங்களின் முன் மறுபிறவி எடுத்து வந்ததுபோல் சில கைதிகள் மீண்டு வந்திருக்கிறார்கள். சுமார் 30 வருடங்களாக, 20 வருடங்களாக கைதிகளாக இருந்தவர்களும் வந்திருக்கிறார்கள். மறுபக்கத்தில் கமாஸின் பிடியிலிருந்த பணயக் கைதிகள் இஸ்ரேல் போய்ச் சேர்ந்திருக்கிறார்கள்.
Continue reading “போர்நிறுத்த ஒப்பந்தம் 2025”சமாதானத்துக்கான நோபல் பரிசு
2025 இன் சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவைச் சேர்ந்த மரியா கொரீனா மஹாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. “ஏழு போர்களை நிறுத்தி, பல இலட்சம் உயிர்களைக் காப்பாற்றியவன் நான். நானே சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன்” என ட்றம்ப் எடுத்த தன்முயற்சியெல்லாம் வீணாகிப் போனது. நோபல் பரிசைப் பெற்ற மரியா கொரீனா “இப் பரிசை ட்றம்பினை கௌரவப்படுத்தி ஏற்றுக்கொள்கிறேன். ட்றம் அதற்குத் தகுதியானவர்” என அறிவித்தார்.
Continue reading “சமாதானத்துக்கான நோபல் பரிசு”Flotilla அலை
இஸ்ரேலின் கோர முகமும் மனித இழிவுச் செயல்களும் புளோற்ரீலா போராட்டக்காரர்களை அச்சமூட்டி அனுப்பிவைத்திருக்கின்றன. கடந்த புதன் கிழமையிலிருந்து வெள்ளிக் கிழமை வரை புளொற்ரீலா வள்ளங்கள் முழுவதும் இஸ்ரேல் கடற்படையால் கட்டம் கட்டமாக முற்றுகையிடப்பட்டு, அவற்றில் பயணம் செய்த 437 செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த அமளிக்குள்ளும் 3 கப்பல்கள் தமது சமிக்ஞைகளை மாற்றி மாற்றி முயற்சிசெய்து பயணித்தும்கூட அவை காஸா கடற்கரையிலிருந்து 130 மைல் தூரத்தை மட்டுமே எட்டித் தொட முடிந்தது.
Continue reading “Flotilla அலை”இதுதான் டிசைன்
பலஸ்தீன காஸா பகுதியில் போரை நிறுத்தி இஸ்ரேலுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க ட்றம்ப் அரசினால் வரையப்பட்ட சமாதானத் தீர்வு பற்றிய பேச்சு இப்போ பேசுபொருளாகியுள்ளது. இந்தக் கூற்றில் இரண்டு கதையாடல்கள் இருக்கின்றன. ஒன்று காஸாவில் நடப்பது ‘போர்’ என்றதான கதையாடல். அங்கு நடப்பது போரல்ல. ஓர் இனப்படுகொலை என்பதே உண்மை. மற்றைய கதையாடல், இஸ்ரேலுக்கு கமாஸ் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பது என்பது.
Continue reading “இதுதான் டிசைன்”அங்கீகரித்தலின் அரசியல்
எல்லாப் பிரச்சினைகளும் 2022 ஒக்ரோபர் 7 இலிருந்துதான் தொடங்கியதான ஒரு தோற்றத்துடன்தான் இன்றைய பலஸ்தீனம் -இஸ்ரேல் இடையிலான பிரச்சினைகள் அணுகப்படுவது தற்செயலானதல்ல. திட்டமிட்ட செயல் அது.
பலஸ்தீனத்தை ஓர் அரசாக அங்கீகரித்தல் என்பதே ஓர் வரலாற்றுக் கேலிதான் என்றபோதும், அதை பேசவேண்டியிருக்கிறதுதான் வரலாற்று அவலம். இஸ்ரேல் என்ற நாடு போலன்றி பலஸ்தீனம் என்ற நாடு 1948 வரை வரைபடத்தில் இருந்த ஓர் நாடு. அதை அங்கீகரிக்கிறோம் என சொல்ல வருமளவுக்கு அரசியலை தலைகீழாகப் புரட்டிப் போட்டவர்கள் யார். பலஸ்தீனத்தை காலனியாக்கி வைத்திருந்த பிரித்தானியர்கள்தான். 1947 இல் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அதிகார நிழலில், சியோனிஸ்டுகளின் தொடர் முயற்சியில், இஸ்ரேல் என்ற நாடு முளைத்தெழும்பியது.
Continue reading “அங்கீகரித்தலின் அரசியல்”காஸாவின் குழந்தைகள்
The Guardian பத்திரிகையின் பத்தி எழுத்தாளரான Rhiannon Lucy Cosslett அவர்கள் 24.05.2025 எழுதிய பத்தியின் மொழிபெயர்ப்பு இது.
கடந்த சில மாதங்களாக எனது கைபேசித் திரையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் காட்சிகள் எனது வாழ்நாளின் எல்லைவரை என்னை துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொண்டே இருக்கப் போகின்றன. காஸாவின் சிறிசுகள், பச்சைக் குழந்தைகள் திரையில் வரும் காட்சிகளைத்தான் குறிப்பிடுகிறேன். மரணித்தவர்கள், காயம்பட்டவர்கள், பசியால் உயிர்பிரிந்து கொண்டிருப்பவர்கள் என்பதான காட்சிகள் அவை. காயம்பட்ட குழந்தைகள் வலியால் கதறுகிறார்கள். தமக்கு பாதுகாப்பாயிருக்கிற தமது அப்பாக்களுக்காக அம்மாக்களுக்காக சகோதரங்களுக்காக என தமது குடும்ப உறவுகளுக்காகவும் சேர்த்து அவர்கள் அச்சப்படுகிறார்கள். குண்டு வீசும் விமானத்தின் பயங்கரம் ஒரு சிறுவனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வார்த்தைகளில் சொல்ல முடியாத பயங்கரத்தையும் வன்முறையையும் காவிவரும் இக் காட்சிகள் என்னை சிதைக்கின்றன. சிலவேளைகளில் காணச் சகிக்காமல் படங்களையும் காணொளிகளையும் எனது விரல்கள் கைபேசித் திரையில் வழுக்கிச் செல்ல வைக்கிறது. அடுத்த காட்சியாக எதையெதைப் பார்க்க நேரிடலாம் என்ற அச்சம் எழுகிறது. பெரும்பாலும் இவற்றை சகித்துக் கொள்ள நான் நிர்ப்பந்திக்கப் படுவதாக உணர்கிறேன்.
Continue reading “காஸாவின் குழந்தைகள்”எதைச் சொல்ல?
இஸ்ரேல்- ஈரான்
குறிப்பு: 23.06.2025 சுடுமணலில் பிரசுரிக்கப்பட்ட இக் கட்டுரை update உடன் சேர்த்து 28.06.2025 மீள எழுதப்பட்டுள்ளது.
13.06.2025 அன்று முதன்முதலில் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை இஸ்ரேல் தனித்து எடுத்த முடிவு போல ஊடகங்கள் சித்தரித்திருந்தன. அமெரிக்காவுக்கு தெரியாமல் இஸ்ரேலின் எந்த அணுவும் நகராது என்ற உண்மையை அவைகள் செய்திகளுள் புதைத்து விட்டன. இத் தாக்குதலின் மையப் பாத்திரத்தை அமெரிக்காவே வகித்தது என அரசியல் அறிஞரான ஜெப்ரி ஸாக்ஸ் (Jeffry Sachs) உட்பட்ட புத்திஜீவிகள் சொல்கிறார்கள். இத் தாக்குதலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னரே அமெரிக்கா 300 ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு கொடுத்திருந்தது என “வோல் ஸ்றீற் ஜேர்ணல்” (Wall Street Journal) செய்தி வெளியிட்டிருந்தது. உக்ரைனுக்கு தருவதாக பைடன் காலத்தில் ஒப்புக்கொண்ட 20000 ட்ரோன்களை ஒருசில வாரங்களுக்கு முன்னர் ட்றம்ப் மத்திய கிழக்குக்கு மடைமாற்றிவிட்டதாக செய்திகள் வந்திருந்தன. அது எங்கே போனது என்ற விபரம் இதுவரை தெரியாது. இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முன்னரே அமெரிக்க போர் விமானங்கள், கடற்படை போர்க் கருவிகள், தரைப்படையின் விமான எதிர்ப்பு கருவிகள் எல்லாமே தயார் நிலையில் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.
Continue reading “எதைச் சொல்ல?”








